Monday, April 22, 2013

புழல் ஜெயிலில் அருண்சுப்பிரமணியம் எம்.எல்.ஏ.வுடன் விஜயகாந்த் இன்று சந்திப்பு!

Monday, April 22, 2013
சென்னை::திருவள்ளூரை அடுத்த மணவாளன் நகரை சேர்ந்தவர் அருண்சுப்பிரமணியம். திருத்தணி தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நிலமோசடி வழக்கில் கைதாகி ஜாமீன் பெறுவதற்கு கோர்ட்டிற்கு தவறான தகவல் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று சந்திக்க புழல் ஜெயிலுக்கு சென்றார். காலை 11.30 மணி அளவில் உள்ளே சென்று அருண்சுப்பிரமணியத்தை சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இருவரும் பேசினார்கள்.

பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தால் பயந்து அ.தி.மு.க.விற்கு வந்து விடுவார்கள் என ஜெயலலிதா நினைக்கிறார். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் பயந்தவர்கள் அல்ல.

தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டும் கடைகள் இன்னும் முழுமையாக மூடப்பட வில்லை. நீதிமன்ற உத்தரவையும், சட்டத்தையும், தமிழக அரசு, கேரளா, கர்நாடகா அரசுகள் மதிப்பது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது எம்.எல்.ஏ.க்கள் சேகர், வெங்கடேசன், மாவட்ட செயலாளர் யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

    

No comments:

Post a Comment