Friday, April 26, 2013
இலங்கை::இலங்கை மீது சர்தேசம் மேற்கொண்டு வரும் அழுத்தங்களுக்கு மத்தியில், வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தாது தவிர்க்க அரசாங்கத்திற்கு எந்த விதத்திலும் முடியாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவங்ச, வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தக் கூடாது என தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
விமல் வீரவங்ச போன்ற அடிப்படைவாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் குறித்து நாம் குழப்பமடைய தேவையில்லை. அவரது கருத்தை குப்பையில் வீசிய ஜனாதிபதி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வட மாகாண தேர்தலை நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துமாறு இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அழுத்தங்களில் இருந்து தொடர்ந்தும் தப்பிக்க மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு முடியாது. அத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்pவை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டியுள்ளது எனவும் சம்பந்தன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment