Thursday, April 18, 2013

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புலிகள் ஆதரவுப் போராட்டக்காரர்களை கண்காணிக்க தனியார் உளவாளிகள்?

Thursday, April 18, 2013
சென்னை::ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புலிகள் ஆதரவுப் போராட்டக்காரர்களை கண்காணிக்க தனியார் உளவாளிகள்?
 
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது என்ற முடிவுக்குப் பிறகு இலங்கை எதிர்ப்பு, தமிழீழ  புலிகள் ஆதரவுப் போராட்டக்கரர்களான மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் போன்கால்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை தனியார் உளவாளிகளைக் கொண்டு கண்காணிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பின் செயலரும் புலிகள் ஆதரவு வழக்கறிஞருமான புகழேந்தி ஃபேக்ஸ், மின்னஞ்சல் மற்றும் ஸ்பீட் போஸ்ட் மூலம் கமிஷனருக்கு புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கமிஷனர் அலுவலகம் அதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளது.

புலிகள் ஆதரவாளர்கள், புலிகள் ஆதரவு மாணவர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் ஆகியோரது போன்கால்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

புகழேந்தி இது குறித்து கூறுகையில் "தமிழீழ (புலிகள்) ஆதரவாளர்களின் டெலிபோன் கால்களை இடையீடு செய்யும் நவீன கருவிகளை தனியார் உளவாளிகள் பயன்படுத்துகின்றனர். இது இந்திய டெலிகிராப் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு இடைஞ்சல் வரக்கூடாது என்று சில மாணவர்கள் அச்சுறுத்தவும் பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார் அவர்.
(புலிகள் ஆதரவு) தனி ஈழ ஆதரவாளர்கள் மாணவர் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அடையாளம் தெரியாத சிலர் தன்னை போனில் அழைத்து ஐ.பி.எல். போட்டிகளுக்கு இடையூறு வரக்கூடாது என்று மிரட்டுவ்தாக தெரிவித்துள்ளார்.
 
 
 

No comments:

Post a Comment