Monday, April 15, 2013

இலங்கைக்கு வழங்கும் நிதி உதவியை குறைக்கிறது அமெரிக்கா!

Monday, April 15, 2013
வாஷிங்டன்::அமெரிக்க அரசின் வெளியுறவுத்துறைச் செயலர் ஜான் கெர்ரி, இந்த ஆண்டு இலங்கை அரசிற்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியினை 20 சதவிகிதம் குறைக்கக்கோரி, அறிக்கை அனுப்பியுள்ளார்.

இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற உள்நாட்டுப் பிரச்சினைகளில் வாழ்விழந்த மக்களின் நிலைமையைச் சீராக்குவதற்கும், மனித உரிமைக்கும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகள், இலங்கை ராணுவத்தால் தடுக்கப்படுவதன் விளைவாக இந்த அறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

2012 ஆம் ஆண்டில், இலங்கைக்கு 8 கோடி டாலர்கள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2014 ஆண்டிற்கு 6 கோடி டாலர்களே கெர்ரியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தொகையிலேயே, மிகக் குறைவானதாகும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்விழந்து தவிக்கும் மக்களின் நிலைமையைச் சீர்படுத்தவும், வாழ்வாதாரங்கள் உயர தாங்கள் எடுத்த முயற்சியும் இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையால் தடைசெய்யப்படுகின்றன என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வங்காள தேசத்திற்கும் இந்த ஆண்டிற்கான நிதி உதவியைக் குறைத்துள்ள கெர்ரி, மாலத்தீவுகளுக்கு அதிகரிக்கும்படி அரசிடம் பரிந்துரைத்துள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment