Sunday, April 21, 2013

இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!

Sunday, April 21, 2013
இலங்கை::இராணுவம் பொதுமக்களை கொடுமைப்படுத்தவில்லை என்பதை முழு உலக நாடுகளுக்கும் தெரியப்படுத்துவதற்காக மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பும் பணிகள் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய நாளாந்தம் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருவதாக கிளிநொச்சியின் ஐந்தாவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியான லெப்டினன்ட் கேர்ணல் அஜித் பி. விக்ரமசேகர  கூறினார்.
 
எல்.ரி.ரி.ஈ.யின் தலைமையகமாக இருந்து வந்த கிளிநொச்சியில், இடம்பெயர்ந்த மக்களுக்கென இராணுவம் நாளாந்தம் செய்யும் பணிகள் பற்றிய ஆதாரபூர்வமான விபரங்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
உலகெங்கிலும் இருக்கும் அரசியல் வாதிகள், அரசாங்கத் தலைவர்கள், கல் விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், நீதிபதிகள் உட்பட முக்கிய தலைவர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக தினமும் ஒரு இலட்சத்து 72 ஆயிரம் மின்னஞ்சல்கள் அனுப்பிக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். இதுபற்றிய முழு விபரங்கள் அடுத்தவாரம் வெளிவரும்.
 
யுத்தம் முடிவடைந்த கடந்த சுமார் நான்காண்டு பகுதியில் அரசாங்க அமைப்புகள் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களுக்காக நிர்மாணித்த ஆயிரக்கணக்கான வீடுகளை விடவும் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்த 54 ஆயிரம் குடும்பங்களுக்கு இராணுவத்தினர் தங்களது சொந்தப் பணத்தையும், இராணுவ வீரர்களின் உடல் உழைப்பையும் கொண்டு 25 ஆயிரம் வீடுகளை நிர்மா ணித்துக் கொடுத்திருப்பதாக கிளிநொச்சி மாவட்டத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா  அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார்.
 
இவ்வாண்டில் மேலும் 354 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க இராணுவம் திட்டமிட்டிருப்பதாகவும் இதில் 96 வீடுகளின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்துள்ளது என்றும் கூறினார்.
 
ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான சீமெந்து, கல், மணல் போன்ற வீடமைப்புக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இராணுவத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது. இராணுவ வீரர்களே அதனை நிர்மாணிக்கும் முழுப் பொறுப்பையும் மேற்கொண்டார்கள் என்று தெரிவித்த அவர், இந்த வீட்டின் தற்போதைய மொத்த பெறுமதி மூன்றரை இலட்சம் ரூபா எனவும் கூறினார்.
 
பாடசாலைப் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிப்பதற்காக இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் தாங்களே விரும்பி தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்து, தரம் ஒன்று முதல் பல்கலைக்கழகத்திற்கு தேர்ச்சி பெறும் வரையில் கல்வி பயிலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபா வரையில் புலமைப் பரிசில்களை வழங்கு வதாகவும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார். இவருடனான முழுமையான பேட்டி அடுத்த வாரம் வெளிவரும்

No comments:

Post a Comment