Saturday, April 27, 2013
சென்னை::வேலூர் சிறையில் வாடும் ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்காகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தினமும் கண்ணீர்விட்டுக் கடிதங்கள் எழுதுவது ஏன்ழுதுவது ஏன்!!
வேலூர் சிறையில் வாடும் ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்காகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி தினமும் கண்ணீர்விட்டுக் கடிதங்கள் வடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அதிகாரம் இருந்த காலத்தில் அவர்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதை வரலாறு இன்னும் மறக்கவில்லை!
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கும் தடா நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, உலகெங்கும் அதிர்வலைகள் ஏற்பட்டன.
ஒரு கொலை வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது உலக நாடுகள் எதிலும் நிகழாத ஒன்று. அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் முறையீடு செய்ய முடியும்.
உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யும் உரிமை, தடா சட்டப்படி கிடையாது.எனவே, 27.02.98 அன்று உச்ச நீதிமன்றத்தில் 26 பேரின் சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவர்களுக்காக மூத்த வழக்கறிஞர் என். நடராசன் வாதாட முன்வந்தார்.
நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நால்வரின் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது. மேலும், மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் வினாக் குறியை எழுப்பியது.
ராஜீவ் கொலையாளிகள் என சி.பி.ஐ-யால் குற்றம்சாட்டப்பட்டு கீழ் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டது எப்படி? இவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படாமல் போயிருக்குமானால், இந்த 19 பேரும் அல்லவா மரண தண்டனைக்கு உள்ளாகியிருப்பார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் இந்த வழக்கு பற்றிய அனைத்து உண்மைகளையும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதற்காக சென்னையில் தொடங்கி குமரி வரை மரண தண்டனை ஒழிப்புப் பிரசாரப் பயணம் மேற்கொள்ள முடிவுசெய்தோம். ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி எங்கள் பயணத்துக்கு தடைவிதித்தார்.
உயர் நீதிமன்றத்தில் இந்தத் தடைக்கு எதிரான மனுவை மூத்த வழக்கறிஞர் சந்துரு மூலம் தாக்கல்செய்து பயணத்தைத் தொடர நீதிமன்ற ஆணையைப் பெற்று எங்கள் பயணத்தைத் தொடர்ந்து நடத்தினோம். தமிழகமெங்கும் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தை பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நடத்தினோம்.
ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
அனைத்துலகப் பொது மன்னிப்புச் சபை, நால்வரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக உலகளாவிய இயக்கம் ஒன்றை நடத்தியது. மரண தண்டனைக்கு எதிராக நாடு தழுவிய மக்கள் இயக்கம் உருவானதைக் கண்ட முதலமைச்சர் கருணாநிதி, வேறு வழியில்லாமல் அவரும் அதற்காகக் குரல் கொடுக்க முன்வந்தார். 1999 அக்டோபர் இறுதி வாரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”தூக்குத் தண்டனை தேவையற்றது என்பதே எனது கருத்தாகும்.
தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினால், குற்றவாளிகள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தும் வாய்ப்பு உண்டு. ராஜீவ் கொலை வழக்குக்கும் இது பொருந்தும்” எனக் கூறினார்.
நால்வரின் மரண தண்டனையை நீக்க வேண்டும் என்பதற்காக, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் கையப்பங்கள் பெற்று 30.11.99-ல் மாபெரும் ஊர்வலத்துடன் சென்று அந்த விண்ணப்பங்களை முதல்வர் கருணாநிதியிடம் அளித்து வேண்டிக் கொண்டோம். நால்வரின் மரண தண்டனையைக் குறைக்க ஆவன செய்வதாகக் கூறினார்.
17.10.99-ல் தமிழக ஆளுநர் பாத்திமா பீவியிடம் நால்வரின் கருணை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், அவர் அதைத் தள்ளுபடி செய்தார். உடனே, கொச்சியிலிருந்த ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யரிடம் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினோம். அப்போது அவர் ”எதைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில நானும் மற்றொரு நீதிபதியும் இத்தகைய கருணை மனுக்களின் மீது தன்னிச்சையாக முடிவுசெய்யும் அதிகாரம் ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ இல்லையென்றும் மாநில அமைச்சரவையும் மத்திய அமைச்சரவையும் அளிக்கும் பரிந்துரைகளை ஏற்றுத்தான் அவர்கள் செயல்படவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறோம்.
அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுங்கள்’ என்று அறிவுறுத்தினார். அதற்கிணங்க மூத்த வழக்கறிஞர் சந்துரு மூலம் உயர் நீதிமன்றத்தில் ஆளுநரின் ஆணைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் 25.11.99-ல் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஆளுநரின் ஆணை செல்லாது எனக் குறிப்பிட்டது.
இந்திய நீதிமன்ற வரலாற்றில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தத் தீர்ப்பாகும். அமைச்சரவையின் அதிகாரத்தை மீட்டு முதலமைச்சர் கருணாநிதியின் கரங்களில் அன்று ஒப்படைத்தோம். ஆனாலும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நால்வரின் மரண தண்டனையைக் குறைப்பதற்கு அவர் முன்வரவில்லை.
இந்த நால்வருக்கும் கருணை காட்ட வேண்டும் என சோனியா காந்தி, குடியரசுத் தலைவருக்குக்கடிதம் எழுதியதாகச் செய்தி வெளியானது. அதன்பிறகே, நளினியின் தண்டனையைக் குறைக்க அவர் முன்வந்தாரே தவிர, மற்றவர்களின் தண்டனையைக் குறைக்கவோ, மரண தண்டனையை அடியோடு ஒழிக்கவோ முன்வரவில்லை.
24.09.08 அன்று மூவரில் ஒருவரான பேரறிவாளன் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் ”செய்யாத குற்றத்துக்காகப் பிழைபட்டுப்போன நீதியின் விளைவால் வாழ்வின் 18 ஆண்டுகால வசந்தத்தை இழந்துவிட்ட மனிதனாக இந்த மனுவை எழுதுகிறேன்.
யாருக்கும் தூக்குத் தண்டனை கூடாது என்றீர்கள். மகிழ்ந்துபோனோம். சதாம் தூக்கிலிடப்பட்டபோது ஒரு மனிதனின் இறுதி அத்தியாயங்களைக் கிழித்துவிடாதீர்கள் எனச் சொன்னீர்கள்.
பேருவகை கொண்டோம். மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் தூக்கு கூடாது என்றீர்கள். வியந்திருக்கிறோம். ஆனால், ஐயா வேதனையோடு தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம்… பிறகேன் எங்களுடைய தூக்குத் தண்டனையை மாற்றத் தயங்குகிறீர்கள்? எம்முடைய வழக்கில் நால்வரையும் தூக்கிலிடுவதற்கு தனக்கோ, எனது பிள்ளைகளுக்கோ விருப்பமில்லை என சோனியா அம்மையார் கூறிய பிறகும் ஏன் எங்களுடைய தண்டனையைக் குறைக்க முடியவில்லை? நளினியின் தண்டனையைக் குறைத்து ஆணையிட்டீர்கள். மகிழ்ச்சி. நன்றி. அவர்களுக்குத் தண்டனையைக் குறைக்க இருந்த நியாயமான காரணங்கள் இன்னும் சொல்லப்போனால் அதைவிடக் கூடுதலான நியாயங்கள் ஏனைய மூவருக்கும் உள்ளன என்பதைத் தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” என படிப்பவரின் உள்ளம் உருகும்படியான கடிதத்தை எழுதி அனுப்பினார்.
ஆனால், கருணாநிதி அதைச் சட்டைசெய்யவில்லை. ஓய்வுபெற்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அண்ணா நூற்றாண்டில் இந்த மூவருக்கும் கருணைகாட்ட வேண்டும் என்று, முதலமைச்சர் கருணாநிதிக்குக் கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர் கடிதத்துக்கும் மதிப்புத் தர முன்வரவில்லை. அதன்பிறகு, இந்த நால்வரின் சார்பில் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பிவைத்தோம். அதைத் தொடர்ந்து டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாய் உட்பட முக்கிய அமைச்சர்கள் அனைவரையும் சந்தித்து மனுக்களை அளித்தோம். சட்டத் துறை அமைச்சர் ஜெத்மலானியைச் சந்தித்தபோது அவர், ‘உங்கள் முதலமைச்சரே இதைச் செய்யலாமே?’ என்று கூறினார்.
என்ன காரணத்தாலோ அவர் தயங்குவதாகத் தெரிவித்தபோது, முதலமைச்சருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். ‘எதற்காகத் தயங்குகிறீர்கள்? நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்’ என்று ஜெத்மலானி கூறியபோது, ‘நீங்களே செய்யுங்கள்’ என்று பேச்சை முடித்துக்கொண்டார் கருணாநிதி.
17 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் நளினியை விடுதலைசெய்ய வேண்டும் என்று எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் கையெழுத்துகளிட்ட மனு ஒன்றை அளித்தபோது, ‘நான் எதுவும் செய்வதற்கில்லை. டெல்லிதான் முடிவுசெய்ய வேண்டும்’ என்று திருப்பி அனுப்பினார். ஆனால், இது உண்மையா? மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினரான லீலாவதியைப் பட்டப்பகலில் நட்ட நடுவீதியில் படுகொலைசெய்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தி.மு.க. கைதியை ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்ய இவரால் முடிந்தது.
ஆனால், இன்று மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்வதற்காகத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அறிக்கைவிடுக்கிறார். இவர் முதலமைச்சராக இருந்தபோது இவரது அமைச்சரவையைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற முன்வரவில்லை.
உண்மையிலேயே மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துசெய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் கூறுகிறாரா? தான் செய்யாததை இப்போதுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா செய்து உலகத் தமிழரின் நன்மதிப்புக்கு உரியவராகிவிட்டால் என்ன செய்வது? என்ற பதைபதைப்புடன் எதிர்மறை விளைவுகள் ஏற்படட்டும் என்று கூறுகிறாரா? எதுவாக இருந்தாலும் கருணாநிதி நடத்துவது நாடகம் என்பதை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்!

No comments:
Post a Comment