Monday, April 29, 2013
சென்னை::ஆறாவது ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் விளையாட தமிழக அரசு தடை விதித்தது.
இதையடுத்து, சென்னையில் நடைபெறும் போட்டிகளில் மட்டும் இலங்கை வீரர்கள் தவிர மற்ற வீரர்களை தெரிவு செய்து கொள்ளும்படி ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்தது. அதன்படி இலங்கை வீரர்கள் சென்னை தவிர மற்ற மைதானங்களில் விளையாடி வருகின்றனர்.
லீக் ஆட்டங்கள் முடிந்து 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தெரிவு செய்யப்படும். இதில் முதல் இரண்டு பிளே ஆப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் முதல் பிளே ஆப் போட்டி வருகின்ற மே 21ம் தேதியும், ஒரு அணியை வெளியேற்றும் அடுத்த போட்டி 22ம் தேதியும் நடைபெற இருந்தது.
ஆனால், பல்வேறு தடைகளைத் தாண்டி பிளே ஆப் சுற்றில் ஆடும்போது, இலங்கையின் முன்னணி வீரர்கள் இல்லாமல் வலுவான அணியை தெரிவு செய்ய முடியாது என்றும், அதனால் அவர்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் எனவும் அணிகளின் உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ஐ.பி.எல். நிர்வாகம், இலங்கை வீரர்கள் விளையாடும் வகையில், சென்னை பிளே ஆப் போட்டிகளை டெல்லிக்கு மாற்றியுள்ளது. சென்னையில் நடைபெற இருந்த அதே நாளில் இப்போட்டிகள் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறும்.

No comments:
Post a Comment