Sunday, April 14, 2013

ராமேஷ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரையான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணக்கம்!

Sunday,April,14,2013
இலங்கை::ராமேஷ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரையான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணங்கியுள்ளனர்.
 
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்கக்கூடியதாய் இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சின் விசேட விவகாரங்களுக்கான செயலாளர் ஆர்.எஸ்.ராகவன் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்ததாக பீ.பீ.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆயிரத்து 230 வர்த்தகர்களுக்கு சுமார் 50 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளிப்பதற்காக ஆர்.எஸ்.ராகவன் இலங்கை வந்திருந்தார்.
வீடற்றவர்களுக்கான வீடுகளை வழங்குவதுடன் அவர்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் விவசாய அபிவிருத்திக்காகவும் இந்திய உதவிகளை வழங்கி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment