Saturday, April 20, 2013

தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது அரசியல் அரசியல் தந்திரத்திற்காக என இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது!

Saturday, April 20, 2013
சென்னை::தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் இலங்கைக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது அரசியல் அரசியல் தந்திரத்திற்காக என இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
 
இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு செயற்படுவதாகவும்  அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது அவர்களுக்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், போரின் இறுதிக்கட்டத்தில் அவ்வாறான போராட்டங்களை நடத்தியிருக்க முடியும் எனவும் இந்தியாவின் றோ புலனாய்வு பிரிவின் முன்னாள் விசாரணை ஆய்வாளர் ஜோதி சிங் தெரிவித்துள்ளார்.
 
இந்திய ஊடகம் ஒன்றுடன் நடைபெற்ற நேர்காணலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 2014 ஆம் நடைபெறவுள்ள இந்திய பொதுத் தேர்தலை இலக்கு வைத்தே தமிழக அரசியல் கட்சிகள் இலங்கைக்கு எதிரான இந்த பாரிய பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
 
சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்தமை தொடர்பில் சிங்கள மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை நிராகரிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அவர்,  சிங்கள மக்களின் சிறு தரப்பினரை தவிர பெரும்பான்மையானவர்கள் இந்தியாவுடனா மிக நெருக்கமான தொடர்புகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
2014 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள தமது கூட்டணி கட்சிகளை தம்முடன் வைத்து கொள்வதற்காகவே இந்தியா இலங்கைக்கு எதிராக, மனித உரிமை பேரவையில் வாக்களித்தது எனவும் சிங் கூறியுள்ளார்.
 
சிங்கள - தமிழ் மக்கள் இடையில் ஒருவருக்கு ஒருவர் கௌரவத்தை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலமே இலங்கையின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் எனவும்  இலங்கையின் மூத்த அண்ணனாக இந்தியா செயற்படுவதன் மூலம் அவ்வாறான தீர்வை நோக்கி நெருங்கி செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 

No comments:

Post a Comment