Monday, April 22, 2013

போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் சிரியாவுக்கு பக்கபலமாக இருப்போம்: ஈரான்!

Monday, April 22, 2013
டமாஸ்கஸ்::சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாதின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர்.

ராணுவத்தை ஏவி போராட்டக்காரர்களை அரசு ஒடுக்கி வருகிறது. மேலும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருவதால் சிரியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி ஈரான், லெபனான், பாலஸ்தீனம் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.

இவர்களில் லெபனானின் மட்டும் 4.25 லட்சம் அகதிகள் தஞ்சமடைந்து உள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி செய்து வருகின்றன.

இந்நிலையில், ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு செயலாளர் அலய்தீன் போரோஜெர்டி 3 நாள் பயணமாக சிரியா வந்துள்ளார்.

'மேற்கத்திய நாடுகளின் மூர்க்கத்தனமாக வெளியுறவுக் கொள்கையினால் நெருக்கடியை சந்தித்து வரும் சிரியா அரசுக்கு ஈரான் பக்கபலமாக இருக்கும்' என்று அவர் உறுதியளித்துள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment