Monday, April 22, 2013

இந்திய எல்லைக்குள் 6 மைல் தூரம் ஊடுருவிய சீன ராணுவம்!!

Monday, April 22, 2013
புதுடெல்லி::அருணாசலபிரதேசம் மாநிலத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீன ராணுவம் அடிக்கடி இந்திய எல்லைகளில் ஊடுருவி வருகிறது. கடந்த வாரம் சீன மக்கள் விடுதலைப்படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் லடாக் பகுதியில் ஊடுருவிய தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

வடக்கு லடாக் பகுதிக்குள் நுழைந்த ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் சுமார் 6 மைல் (10 கிலோ மீட்டர்) தூரத்துக்கு வந்தனர். மலைப் பாங்கான ஒரு இடத்தில் வெட்டவெளியில் அவர்கள் முகாம் ஒன்றையும் அமைத்தனர். சுமார் 20 வீரர்கள் அந்த முகாமில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இந்திய ராணுவத்தின் 5-வது பட்டாலியன் படைப்பிரிவு ஒன்று அங்கு விரைந்தது. சீன ராணுவம் அமைத்த முகாமில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்திய ராணுவம் தற்காலிக கூடாரம் அமைத்துள்ளது.

சீன ராணுவத்தின் இந்த ஊருடுவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாக பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் கூறுகையில், நாட்டை பாதுகாக்க தவறிய மத்திய அரசுக்கு ஆட்சியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றார்.

இதுபற்றி மத்திய பாதுகாப்பு மந்திரி ஏ.கே.அந்தோணியிடம் கேட்டபோது, இந்தியாவின் நலனை காக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கூறி சமாளித்தார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment