Thursday, April 11, 2013

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை: இராணுவம் தெரிவித்துள்ளது!

Thursday, April 11, 2013
இலங்கை::ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைமீது அவதானம் செலுத்தும் பொருட்டு இராணுவத்தளபதியினால் கூட்டப்பட்ட நீதி மன்றக்குழுவில் தலைவராக மேஜர் ஜெனரல் ஏ.டபிள்யு. ஜே.சீ. டி சில்வா,உறுப்பினர்களாக ஜெனரல் ஏ, கே. எஸ் பெரேரா,பிரிகேடியர்ஜே.ஆர். குலதுங்க,பிரிகேடியர் டபிள் யு .ஆர். பீ டி சில்வா,பிரிகேடியர் ஏ.எஸ் விஜேவிக்ரம,செயலாளராக லெப்டினன் கேனல்எச்.எம்.எல்.டீ ஹேரத் ஆகியோர் அடங்குவர்.
இந்நீதிமன்றக் குழுவானது ‘சனல் 4’ தொலைக்காட்சியினால் இராணுவத்தினர் மீதி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மீது அவதானம் செலுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நீதி மன்றக்குழுவின் முதல் பகுதி அறிக்கையானது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (ஏப் 10) கையளிக்கப்பட்டது.
மூத்த இராணுவத்தளபதிகள், காலாட்படை, பீரங்கிப்படை, உளவுப் படை, சிவில் அலுவல்களுக்கான அதிகாரிகள், மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மருத்துவர்கள் போன்றோர்களின் சாட்சியங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நீதி மன்ற விசாரணைகளின் முடிவின்படி விடுதலைப்புலிகள் மக்கள் வாழும் நிலைகளில் தமது பீரங்கி நிலைகளை நிறுவி தாக்குதல்களை மேற்கொண்டதன் மூலம் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியுள்ளனர். அத்துடன் சிறுவர்கள் உட்பட மக்களை தமது விருப்பின்றி போராட வைத்ததன் மூலம் சர்வதேச சட்டங்களையும் மீறியுள்ளனர்.
 
மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களின் பிரகாரம் அதிமேதகு ஜனாதிபதியினதும் இராணுவத்தளபதிகளினதும் கட்டளைக்கிணங்க எந்த சந்தர்ப்பத்திலும் படையினர் விதிமுறைகளை மீறாமல் செயற்பட்டதுடன் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கையாக யுத்த சூனிய வலையத்தின் எல்லையை 500 மீற்றர்களால் மேலும் அதிகரித்துள்ளனர்.
மேலும் புலிகள் தமது பீரங்கி நிலைகளை மக்களின் வாழ்விடங்களில் நிறுவியது மட்டுமன்றி தாக்குதல் களையும் மேற்கொண்டனர் எனினும் மக்களின் உயிர் இழப்புக்களைத் தவிர்க்கும் பொருட்டு இராணுவத்தினரால் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளமுடியாது போனது. அதேசமயம் புலிகளின் இவ்வாறான செயல்கள்மூலம் அதிகளவான படையினரை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இராணுவத்தினருக்கு ஏற்பட்டது.
மேலும் மனிதாபிமான நடவடிக்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச சட்ட திட்டங்களுக்கமைய ஒழுக்கத்துடன் செயல்பட்ட படையினர் பொதுச் சொத்துக்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஏற்படும் சேதம் அல்லது இழப்புக்களை தவிர்த்தே செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்....
 
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை  இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அடிப்படை நீதிமன்ற அறிக்கையிலே இந்தவிடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையின் முதல் பகுதி இராணுவ தளபதியினால் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
 
கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களை பாதுகாத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை  இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய தயாரிக்கப்பட்ட அடிப்படை நீதிமன்ற அறிக்கையிலே இந்தவிடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இந்த அறிக்கையின் முதல் பகுதி இராணுவ தளபதியினால் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
 
கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களை பாதுகாத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்திய அரசுதான் பொறுப்பு என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற போது கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்´ என்று மேலும் கூறியுள்ளார். .
 

 

No comments:

Post a Comment