Friday, April 26, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்குடா பிரதேசத்தில் நேற்று 34 கிலோ 700 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரசேத்திலுள்ள வீடொன்றில் மறைத்து வைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சாவை கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் குற்றங்களை தடுக்கும் அதிரடி நடவடிக்கையின் காரணமாகவே இவை கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
No comments:
Post a Comment