Saturday, March 30, 2013
சென்னை::சென்னை போட்டிகளை கொச்சியில் நடத்துவதிலும், சென்னை அணி சார்பில் முக்கிய வீரர்கள் பங்கேற்க்காவிட்டால் அணிக்கு பலம் குறையும் என்று அணியின் உரிமையாளர்கள் ஐ.பி.எல் நிர்வாகத்திடம் கருத்து வேறுபாடு தொடர்வதாலும், சென்னையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுவதில் தொடர் இழுப்பறி நடந்து வருகிறது.
ஆறாவது ஐ.பி.எல்.,டி20 தொடர் வரும் ஏப்ரல்3 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது.
இதை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல் நிர்வாகம், மாற்று வழியை தேடியது. அணித்தலைவர் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் அனைத்து போட்டிகளையும் நடத்தலாம் என்று அணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு ஐ.பி.எல்., நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. கடைசியில், சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டர் என்று உறுதி தெரிவித்தது.
பிரச்சனை தீர்ந்தது என்ற நிலையில் சென்னைக்கெதிரான போட்டிகளில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கினால் அது அந்த அணிக்கு சாதகமாகி விடும் என்று அணி உரிமையாளர்கள் ஏற்க மறுக்கின்றனர்.
இது குறித்து பேச்சு வார்த்தை நடைபெறும் என்றும் கூறப் படுகிறது. இதில் முடிவு ஏற்பட்டால், சென்னையில் நடக்கவுள்ள போட்டிளை கேரளாவின் கொச்சிக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தவிர, விசாகப்பட்டின மைதானத்தையும் தயார் நிலையில் வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும் மே21, 22 ல் நடக்கவுள்ள “பிளே ஆப்” போட்டிகள் கட்டாயம் சென்னையில் நடக்காது என்று தெரிகிறது. ஏனெனில், இறுதிச்சுற்றுக்கான தகுதிப் போட்டி என்ற நிலையில் முன்னணி வீரர்களை சேர்த்தாக வேண்டிய நிலை இருப்பதால், அதில் இலங்கை வீரர்கள் நிச்சயம் இடம் பெறுவர் . இந்த போட்டிகள் பெரும்பாலும் விசாகப்பட்டினத்தில் நடக்கும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment