Saturday, March 30, 2013
இலங்கை::இலங்கையின் மொத்த சனத் தொகையான இரண்டு கோடியே இரண்டு லட்சத்து 63 ஆயிரம் பேரில் ஒரு கோடியே 42 லட்சத்து 22 ஆயிரம் பேர் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் எனவும் இது மொத்த சனத் தொகையில் 70.2 வீதமாகும் எனவும் இலங்கை புள்ளிவிபரம் மற்றும் சனத் தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஒரு கோடியே இரண்டு லட்சமாக இருந்த பௌத்தர்களின் எண்ணிக்கை 9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.
முழு சனத் தொகையில் 12.6 வீதம் இந்துக்கள், இவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 54 ஆயிரமாகும். 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது, இலங்கையில் 22 லட்சத்து 90 ஆயிரம் இந்துக்கள் இருந்தனர். இது 15. 5 வீதமாகும்.
இலங்கையில் தற்போதுள்ள இஸ்லாம் மதத்தினரின் எண்ணிக்கை 19 லட்சத்து 60 ஆயிரமாகும். இது மொத்த சனத் தொகையில் 9.7 வீதமாகும். 1981 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இலங்கையில் 11 லட்சத்து 21 ஆயிரம் முஸ்லிம்கள் இருந்தனர். இது 7.5 வீதமாகும்.
றோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றும் 12 லட்சத்து 30 ஆயிரம் பேரும், கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவ சமயங்களை பின்பற்றும் இரண்டு லட்சத்து இரண்டாயிரம் போர் இலங்கையில் உள்ளனர் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment