Sunday, March 03, 2013
இலங்கை::இலங்கையில் இன்று என்ன நடக்கின்றது? என்பதை இங்கு நேரில் வந்து கண்டறியாதவர்களே எங்கள் நாட்டில் மனித உரிமை மீறல்களும் யுத்தக் குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன என்ற ஜோடிக்கப்பட்ட போலியான கட்டுக்கதைகளை நம்பி எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் தீங்கிழைக்க எத்தனிக்கிறார்கள்.
பொதுவாக எந்தவொரு நாட்டிலும் யுத்தம் நடக்கும் போது யுத்த காலத்தில் தெரியாத்தனமாக சிக்கிக் கொள்ளும் சில பொதுமக்கள் உயிரிழப்பதை நாம் சமீப காலத்திலும், வரலாற்றிலும் பார்த்திருக்கிறோம். இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த இராணுவத்தினருக்கும் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கும் இறுதி நாட்களில் யுத்தம் நடந்த போது சில பொது மக்கள் உயிரிழந்ததை எவருமே மறுக்க முடியாது.
இத்தகைய சூழ்நிலையில் யாருடைய துப்பாக்கி வேட்டுகளுக்கு பொதுமக்கள் பலியானார்கள் என்பதை நாம் யதார்த்தபூர்வமாக அவதானித்து ஒரு முடிவெடுக்க வேண்டும். தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை வைத்துக்கொண்டு, இராணுவம் தான் அவர்களை படுகொலை செய்தது என்று நினைத்து இராணுவத்தின் மீதும், இலங்கை அரசாங்கத்தின் மீதும் ஆதாரம் எதுவுமின்றி குற்றம் சுமத்துவது நியாயம் தானா என்பதை எங்கள் நாட்டின் மீது குற்றம் சுமத்துபவர்கள் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது அவசியம்.
எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் இராணுவத்திற்கு எதிரான யுத்தத்தின் போது, பொது மக்களை பாதுகாப்புக் கேடயங்களாக வைத்து போரிடும் யுத்த தந்திரத்தைக் கையாண்டார்கள். தாங்கள் பொதுமக்களுக்குப் பின்னால் மறைந்திருந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி வேட்டுக்களையும், ஷெல் தாக்குதல்களையும் மேற்கொள்ளும் போது, தங்களுக்கு ஏற்படும் உயிரிழப்பினால் ஆத்திரமடையும் இராணுவத்தினர் பாதுகாப்புக் கேடயமாக பலிக்கடாக்களைப் போல் தப்பிச் செல்ல வழியில்லாமல் பரிதாப நிலையில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தி, அவர்களை கொன்று குவித்தால், அது தங்களுக்கு சர்வதேச ரீதியில் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்ற நிலையில் இருந்தே, எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகள் யுத்தத்தை நடத்தினார்கள்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் இத்தகைய தர்மசங்கடமான நிலையில் இருந்த இராணுவத்தினர் மனித கேடயங்களாக இருந்த பொதுமக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் மனிதாபிமான முறையில், யுத்தத்தை நடத்தினார்கள். இதனால் தான் ஓரிரு நாட்களில் முடியக்கூடிய இந்த யுத்தம் பல நாட்களாக நீடித்தது.
யுத்தத்தின் இறுதி நாட்களில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளே மனித கேடயமாக தாங்கள் தடுத்துவைத்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் தப்பித்து இராணுவத் தரப்பை சென்றடைவதற்கு எடுத்த முயற்சியின் போது, அந்த மக்களை கோழைகளைப் போன்று முதுகில் சுட்டுக் கொன்றார்கள் என்பதற்கு போதியளவு ஆதாரங்கள் இப்போது இருக்கின்றன.
இதுதான் யுத்தத்தின் இறுதி நாட்களில் இடம்பெற்ற உண்மைச் சம்பவங்களாகும். இராணுவத்தரப்பிற்கு தப்பி வந்தவர்களில் பெரும்பாலானோர் இந்த உண்மையை அதிகாரிகளுக்கு அறிவித்து, “தங்களை வாழவைப்போம் என்று நம்பிக்கை துரோகம் செய்து இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு கொடியவர்களாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தினர் மாறிவிட்டார்கள்” என்று கண்ணீர்விட்டு அழுததாக அறிவிக்கப்படுகிறது.
தயவு செய்து வெளிநாட்டில் இருந்துகொண்டு இலங்கை பற்றி செய்யப்படும் துஷ்பிரசாரங்களை நம்பாமல், இலங்கைக்கு வந்து யுத்தம் நடந்த பிரதேசங்களுக்கு சென்று பார்த்து, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாடி, உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி, அரசியல் அனுபவமிக்கவர். இந்தியாவிலிருந்து இலங்கையைப் பற்றி விமர்சிப்பது தவறு என்றுணர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்து வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் சென்று அங்கு நடந்த உண்மையை மிகவும் தெளிவான முறையில் புரிந்துகொண்டுள்ளார்.
அதன்பின்னரே, சுப்பிரமணிய சுவாமி அவர்கள் இந்த யுத்தத்தில் இலங்கை இராணுவமோ அரசாங்கமோ மனித உரிமை மீறல்களை செய்யவில்லை என்பதை ஆதாரபூர்வமாக கூறுகிறார்.
இவ்விதம் உண்மையை எடுத்துரைக்கும் போது, இந்தியாவில் தமக்கு எதிர்ப்பு எழும் என்பதை உணர்ந்தும் கூட, இந்த நல்ல மனிதர் எத்தகைய சவாலையும் எதிர்நோக்கத் தயாரான நிலையில் உண்மையை எடுத்துரைக்கின்றார். குற்றம் இழைக்காத ஒரு நாட்டுக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் சுயமாக சிந்தித்து செயற்படுபவர்கள் அங்கு இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவதற்கு தங்கள் ஆதரவை அளிக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் காரணங்களுக்காக கலைஞர் கருணாநிதியும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், தமிழ் நாட்டு அரசியலில் செல்லாக்காசாகி இருக்கும் வைகோ, நெடுமாறன் போன்றோர் எங்கள் நாட்டை தண்டிப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொண்டு வந்தாலும், குற் றம் இழைக்காத நம் நாட்டு மக்களும் அரசாங்கமும் அதைப்பற்றிக் கவலைப்படப் போவதில்லை.



No comments:
Post a Comment