Sunday, March 3, 2013

ஐ.நா. காரியாலயத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் தயாரித்த அறிக்கை,மார்ச் 20 இல் பரிசீலிப்பு!

Sunday, March 03, 2013
இலங்கை::மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் காரியாலயத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் தயாரித்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துக்கு நல்லிணக்கப்பாட்டை ஊக்குவிப்பதற்கும் ஒழிவுமறைவு அற்ற செயற்பாட்டை ஆதரிப்பதற்கும் ஏதுவாகவும் அமைந்துள்ளது. இவ் அறிக்கை மார்ச் மாதம் 20 ஆம் திகதி அன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்று அறிவிக்கப்படுகிறது.

 கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணையின் அடிப்படையிலேயே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 22 முதல் நவம்பர் 5 ஆம் திகதி வரை ஆணைக்கு ழுவின் 14 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை பற்றிய உலகளாவிய காலப் பகுதிக்கான மீளாய்வு இறுதி அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட் டுள்ள இவ் அறிக்கை எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி அன்று ஐ. நா. மனித உரிமை பேரவையினால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இது போன்ற சகல மனித உரிமைப் பேரவைக்கான பிரேரணைகளும் மார்ச் 21 ஆம் திகதி அன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 22 ஆம் திகதி அன்று அங்கீகரிக்கப் படவுள்ளன. அதை யடுத்து ஐ. நா. மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.

No comments:

Post a Comment