Thursday, March 28, 2013
இலங்கை::தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளராக பங்சலிங்கம் தவவேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அறிவித்துள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கையின் பேரில் நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்ட்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜாவுக்குப் பதிலாகவே ப.தவவேந்திரராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்’ என அவர் குறிப்பிட்டார்.
20013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டத்தின் போதே புதிய அமைப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, கட்சியின் பிரதி செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை தெரிவு செய்யப்பட்டார் என பிரசாந்தன் மேலும் தெரிவித்தார்.
இந்த நிருவாக கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 9 உள்ளுராட்சி மன்றங்களுக்கும் புதிய முகங்களை தேர்தலில் இறக்குவது தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment