Sunday, March 3, 2013

14 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களை காலில் ஒட்டி இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட இந்திய பிரஜை விமான நிலையத்தில் கைது!

Sunday, March 03, 2013
இலங்கை::சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதி யான தங்க பிஸ்கட்டுக்களை காலில் ஒட்டி இந்தியாவுக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார். சென்னை நோக்கி செல்லவிருந்த இந்திய பிரஜை ஒரு வரே இவ்வாறு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடை வியாபாரியான குறித்த நபர் இலங்கை - இந்தியாவிற்கிடையில் தொடர்ச்சியான பல பயணங்களை மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரி ஜீ. ஜீ. பிரேமசிறி தெரிவித்தார். இவரின் வலது காலில் 100 கிராம் எடையுடைய இரண்டு தங்க பிஸ்கட்டுக்கள் இருந்ததாக சுங்க அதிகாரி குறிப்பிட்டார். தங்க பிஸ்கட்டுக்கள் இலங்கை அரசுடமையாக்கப்பட்டு 50 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டு இந்திய பிரஜை நாட்டை விட்டு வெளி யேற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment