Wednesday, February 27, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதனை ஏற்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்படுத்தல் தொடர்பில் பக்கச்சார்பான, ஒரு தலைப்பட்சமான எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லிணக்க முனைப்புக்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமே தவிர, இலங்கையை சர்வதேச அரங்கிலிருந்து ஓரம் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்படக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.நாட்டின் சகல இன மக்களையும் உள்ளடக்கும் காத்திரமான நல்லிணக்க முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment