Wednesday, February 27, 2013

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் பிரேரணை கொண்டுவர எந்தவொரு தரப்பிற்கும் அனுமதி அளிக்கக்கூடாது - மஹிந்த சமரசிங்க!

Wednesday, February 27, 2013
இலங்கை::ஜெனீவா::இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் பிரேரணை கொண்டுவர எந்தவொரு தரப்பிற்கும் அனுமதி அளிக்கக்கூடாது என மனித உரிமை கவுன்ஸில் 22வது மாநாட்டில் இலங்கை கோரிக்கை முன்வைத்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து சற்றுமுன் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் கருத்து வெளியிட்ட இலங்கையின் மனித உரிமை விசேட பிரதிநிதி, அமைச்சர் மஹிந்த சமரசிங்க இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.

அவ்வாறு பிரேரணை கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டால் அது பாரபட்சமான, அடிப்படையற்ற செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் வெளியிட்ட கருத்துக்களை எதிர்பாருங்கள்

No comments:

Post a Comment