Thursday, February 28, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஜெனீவா மாநாடு நெருங்கும் போது போலி கட்டுக்கதைகளை புலிகளை ஆதரிக்கும் இயக்கங்களும் அரச சார்பற்ற சில இனத்துரோக சக்திகளும் பரப்பி வருவதை வழமையாக கொண்டுள்ளன. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு இற்றைக்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டன. பயங்கரவாத சூழலில் இருந்து முற்றாக விடுபட்ட எம்மக்கள் சிறப்பானதோர் எதிர் காலத்தை நோக்கிய தம் பயனத்தை ஆரம்பித்திருக்கின்ற இவ் வேளையில் சனல் 4 தொலைக்காட்சி பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ஆயுதப்படையினர்தான் கொலைசெய்ததாக புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு இலங்கை அரசின் மீது மக்களினதும் உலக நாடுகளினதும் வெருப்பை அதிகரித்து உலக அரங்கில் இலங்கை அரசை குற்றவாளியாக சித்தரிக்க முயற்சித்துள்ளது.
சனல் 4 தெலைக்காட்சியின் தயாரிப்பாளர் கெலும் மக்ரி, பாலச்சந்திரன் கொள்ளப்படுவதற்கு முன்னைய படம்; மற்றும் துப்பாக்கி குண்டுகள் துளைத்து இறந்து கிடக்கும் பின்னைய படம் ஆகிய நிலையான படங்களை வைத்தே தனது செய்தி அறிக்கையை விபரித்துள்ளார். அத்துடன் ஒரு துப்பாக்கி இலக்கு வைக்கக்கூடிய வெகு சமீப தூரத்தில் இருந்தே இலங்கை ஆயுதப் படைகளால் சுடப்பட்டிருப்பதாக விளக்கியுள்ளார். இந்தப் படத்தை ஆய்வு செய்த தடவியல் பகுப்பாய்வாளர்கள் அதை உறுதி செய்துள்ளனர்.
இலங்கை ஆயுதப்படையினர் அந்தச் சிறுவனை ஒரு பதுங்கு குழியினுள் வைத்து சுட்டு கொன்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் அந்தப் பதுங்கு குழி இராணுவத்தினுடையது மற்றும் புலிகளுடையது அல்ல என்பதும் நிரூபிக்கப்பட வேண்டும். பதிலளிக்க வேண்டிய மற்றொரு கேள்வி அந்தப் படத்தில் காண்பிக்கப் பட்டிருப்பதைப்போல அந்தச் சிறுவனால் எப்படி அந்த இடத்தில் அமைதியாக அமர்ந்திருக்க முடிகிறது (செய்தி அறிக்கையில் நிபுணர்கள் தெரிவித்திருக்கும் அனுமானங்களை நம்புவதாக இருந்தால், அவன் ஒரு போர் வீரனின் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருந்தால் எப்படி அவ்வாறு அமைதியாக இருக்க முடியும்), மற்றும் ஒரு கையில் ஒருவகை பிஸ்கட் பைக்கட்டை வைத்துக்கொண்டு மறு கையால் அதை கொரித்து உண்பதை காண முடிகிறது, ஒன்றில் அவனைச் சுற்றியுள்ள எல்லாம் அவனுக்கு பரீட்சாத்தமானதாக இருந்திருக்க வேண்டும் என்பதே இதில் கூறப்படாத உண்மையாகும்.
எந்த அளவுக்கு தடயவியல் நிபுணர்கள் விரிவாக மேற்கோள் காட்டி ஊகங்களை தெரிவித்தாலும் அவை விஞ்ஞானபூர்வமான தரவுகளுக்கு ஆதாரமாக இல்லை, உலகெங்கிலுமுள்ள மக்களும் அமைப்புக்களும் அந்த அறிக்கையினை அடிப்படையாக வைத்து தங்கள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு ஏற்ற ஆதாரத்தை அந்த அறிக்கை உருவாக்கவில்லை. சனல் 4 வெளியிட்டுள்ள இச் சிறுவனைப் புலிகளே படுகொலை செய்து அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது போடமுயற்சி செய்துள்ளதுடன் இதனூடாக அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்தவும் அவர்கள் எண்ணியுள்ளனர்.
இராணுவம் எக்காரணம் கொண்டும் மனிதாபிமானமற்ற முறையில் யுத்த முனையில் அப்பாவிகளை சுட்டுக்குவிக்கவில்லை. எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளே தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றார்கள். யுத்தத்தின் கடைசி கட்டத்தில் எல்.ரி.ரி.ஈயினரின் பிடியில் இருந்து இராணுவத்தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களை இந்தக் கொடிய பயங்கரவாதிகளே சுட்டுக் கொல்வதை முழு உலகமும் கண்கூடாகக் கண்டது.
புலிகள் தலைவர் பிரபாகரனிக் மகனை இலங்கை அரச படையினர் கொடூரமாக கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டும் சனல் 4 தெலைக்காட்சியின் தயாரிப்பாளர் கெலும் மக்ரி யுத்தத்தின் போது புலிகள் பல இலட்சக்கணக்கான அப்பாவிச் சிறுவர்களையும் பொது மக்களையும் கொடூரமாக கொலை செய்தமையை கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன் என்று புரியவில்லை?
சாதாரன பொது மக்களின் பிள்ளைகளை ஏன் இவர்கள் கண்டுகொள்வதில்லை? இல்லை, சிறுவர்கள் முதியவர்கள் எனப் பார்க்காமல் புலிகள் தமது சொந்த சமூகத்தை கொன்று குவித்ததை மக்கள் மனதில் இருந்து இவர்கள் அழித்துவிட முயற்சிக்கின்றார்களா? இலங்கை அரசு இதற்கான ஆதாரங்கள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் மற்றும் நேரடிச் சாட்சியங்கள் என அதிகமான அத்தாட்சிகளை வெளியிட்டுவந்துள்ளது. இவற்றை வைத்து ஏன் அவர் உண்மை ஆதாரங்களுடன் ஆவனப்படங்களை தயாரிக்கவில்லை என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
ஆனால் பொறுப்பு மிக்க இலங்கை அரசானது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரனடைந்த 295,000 தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியமர்திய வண்ணம் உள்ளதுடன் 11770 புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மிகுந்த பயனை அளிக்கக்கூடிய வகையில் வினைத்திறன் மிக்கதுமான புனர்வாழ்வுத்திட்டத்தை மிகுந்த எதிர்பார்புடன் திட்டமிட்டு முன்னெடுத்து வெற்றியும் கண்டுள்ளது. அத்துடன் இவர்களுள் 500 க்கும் அதிகமான சிறுவர் போராளிகள் இருந்ததுடன் அவர்களுக்கு தமது கல்வியை தொடரும் வாய்ப்பை வழங்கி அவர்களுக்கு சிறந்ததோர் எதிர்காலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாம் காண்கூடாக கண்டுவந்த உண்மைகளை கெலும் மக்ரீயின் போலிக்கட்டுக்கதைகள் மூலம் மறைத்துவிட முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிரந்தர சமாதானத்தின் மூலம் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் தற்கொலை குண்டு தாக்குதல், குண்டு வெடிப்பு, சிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு, உயிரிழப்பு மற்றும் அனைத்து அழிவுகளிலும் இருந்து சுதந்திரம் பெற்றனர். வடக்கில் வாழும் மக்கள் நிரந்தர நிம்மதியையும், சுதந்திரத்தையும், சந்தோஷத்தையும் பெற்றுக்கொண்டனர். நாடு பெரும் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது என்பதே அனைவரும் கண்கூடாக காணும் உண்மை.
A Sinhalese child beheaded by the LTTE terrorists – During ethnic cleansing campaign in the Trincomalee district
A child killed by throwing in to fire by the LTTE- Ethnic cleansing against Muslims in Batticaloa district
A Tamil mother mourns over her child who was killed by the LTTE terrorists, for refusing to join the terrorist training sessions
LTTE terrorists killed an infant of 18 months (Mavadiwembu in Sittandi in the Eravur area of the Batticaloa District)- 16 August, 2006
The relatives collect the remains of a butchered child by the LTTE - Ethnic cleansing against Sinhalese
A mother and her infant- Hacked to death by the LTTE terrorists in one of their “night raids” at a village- Morawewa
Prbhakaran’s “great love” for children- a Singhalese child hacked to death in Padaviya – Anuradhapura
33 Buddhist monks waylaid and massacred by the LTTE in Arantalawa, 2 July 1987
No comments:
Post a Comment