Saturday, January 05, 2013
இலங்கை::பயணிகளின் வசதிகருதி பலாலி விமானநிலையத்தில் புதிய பயணிகள் முனையம் அமைக்கப்பட்டுள்ளது. பலாலி மற்றும் கொழும்புக்கிடையேயான விமானச் சேவைகளின் போது, இராணுவத்தினரதும், பொதுமக்களதும் தேவைகளுக்கேற்ப இப் புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப் புதிய வசதியானது விமானப்படையின் கட்டளைத்தளபதி எயா மாஷல் ஹர்ஷ் அபயவிக்ரமவால் இன்று (ஜன-04) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி மூலம் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார மற்றும் சமூக எழுச்சியானது, யுத்தம் கடுமையாக இடம்பெற்ற வடக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது வடக்கின் சுற்றுலா அபிவிருத்தியை மேலும் விருத்தியடையச் செய்யும். இதைத்தவிர இலங்கையை உள்நாட்டு விமான நிலையங்களின் தரம் எதிர்காலத்தில் மேலும் விருத்தியடையும், இதன் மூலம் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் பலாலி விமானப்படை கட்டளை அதிகாரி உட்பட பல அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment