Friday, January 25, 2013

எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுடன்கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது!

Friday,January 25, 2013
இலங்கை::2013 ஆம் ஆண்டிற்காக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் பதிவிக்கான நியமனம் தொடர்பில் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசவுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கட்சியின் சிரேஸ்ட் தலைவர்கள் பலர் இருந்துள்ளனர்.

இதன்போது எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரம சிங்க, சஜீத் பிரதி தவைராக இருந்த போது அவரினால் பல குழப்பங்கள் தோற்றுவிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

கட்சியின் ஒன்றுமை, மற்றும் கட்சியின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு அவரினால் பாதிப்பு ஏற்பட்டதையும் ரணில் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில், தாம் எதிர்காலத்தில் கட்சியின் கோட்பாடுகளுக்கு இனங்கி செயற்படுவதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment