Friday, January 25, 2013

சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் பகுதியில் அனாதையாக கிடந்த சூட்கே‌சி‌ல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் :இல‌‌‌ங்கை ‌பிரமுகரை தேடி

Friday,January 25, 2013
சென்னை::சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகள் பகுதியில் அனாதையாக கிடந்த சூட்கே‌சி‌ல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் இருந்ததை அ‌திகா‌ரிக‌ள் கை‌ப்ப‌ற்‌றி, இல‌‌‌ங்கை ‌பிரமுகரை தேடிவருகி‌ன்றன‌ர்.

சென்னை விமான நிலையத்தில் நேற்‌றிரவு கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமான பயணிகளின் உடமைகள் வந்த பகுதியில் நீண்ட நேரம் ஒரு சூட்கேஸ் மட்டும் அனாதையாக கிடந்தது.

இதுபற்றி விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று அந்த சூட்கேசை திறந்து சோதனை போட்டனர். அப்போது அதில். 1 ¾ கிலோ தங்க பிஸ்கட்டுகள் இருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.

அந்த் சூட்கேசில் ஒட்டப்பட்டிருந்த டேக்கில் கொழும்பை சேர்ந்த முஸ்தபா என்பவர் கொண்டு வந்தது தெரியவந்தது. அவர் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனைக்கு பயந்து சூட்கேசில் கடத்தி வந்த தங்க பிஸ்கட்டுகளை போட்டுவிட்டு அவர் மட்டும் தப்பியது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகி‌ன்றன‌ர்.

No comments:

Post a Comment