Monday, January 28, 2013
புதுடெல்லி::இலங்கை விடயத்தில், புலம்பெயர் (புலி ஆதரவு) தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது - ஜி எல் பீரிஸ்!
இலங்கை விடயத்தில், புலம்பெயர் (புலி ஆதரவு) தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் (புலி ஆதரவு) தமிழர்கள், அவர்கள் வாழும் நாடுகளுக்கு, இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கின்றனர்.
எவ்வாறாயினும் தமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளபோவதில்லை என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment