Friday, January 25, 2013

கமலேஷ் சர்மா, பொதுநலவாய மாநாடு தொடர்பிலான கரிசனை தொடரிபில் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை - கெஹலிய ரம்புக்வெல!

Friday,January 25, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, பொதுநலவாய மாநாடு தொடர்பிலான கரிசனை தொடரிபில் அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்கள்,

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரத்தை அடுத்து பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா 2013 ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது தொடர்பில் கரிசனை செலுத்தவேண்டிவரும் என்று தெரிவித்துள்ளதுடன் கனடா சமுகமளிக்ககாது என்றும் தெரிவித்துள்ளதே இவைத்தொடர்பில் பொதுநலவாய மாநாடு தொடர்பில் அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்வதன் நோக்கம் என்ன? இலங்கையைச்சேர்ந்த மற்றுமொருவருக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? என்று வினவினர்.

அந்த கேள்விகளுக்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,

குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்கு முன்பிலிருந்தே கனடா இந்த பொதுநலவாய உச்சிமாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது. பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தனது கரிசனை தொடர்பில் உத்தியோகபூர்வமாக எமக்கு அறிவிக்கவில்லை.

அமெரிக்க பிரதிநிதிகள் வரலாம் போகலாம் அதில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. அவர்கள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிகின்றேன்.

அந்த பேச்சுவார்த்தையின் போது கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பரிந்துரைகளை அமுல்படுத்தல், பாதுகாப்பு தரப்பினரின் செயற்பாடுகள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்துவர்.

சவூதி அரேபியாவில் இலங்கையைச்சேர்ந்த மற்றுமொரு பிரஜைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்பில் அரசாங்கத்தினால் எதனையும் செய்யமுடியாது. தொழில்வாய்ப்புக்காக சென்ற இடத்தில் கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டால் அவர்களுக்கு அந்நாட்டின் சட்டத்திக் கீழ் தண்டணை வழங்குவதை தவிர்க்கமுடியாது.

ரிசானா நபீக்கின் விவகாரம் மாறுப்பட்ட விடயமாகும். அவரை மீட்டெடுப்பத்தற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெற்றுக்காசோலையில் கைச்சாத்திட்டு தருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். என்றார்.

இலங்கையில் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்டமை கவலையளிப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கரிசனை காட்டியுள்ளதாகவும் அதன் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment