Friday, January 25, 2013

புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக நலன்புரி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது!

Friday,January 25, 2013
இலங்கை::புலிகளின் முன்னாள் போராளிகளுக்காக நலன்புரி நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் இந்த நலன்புரி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சமூகத்துடன் மீள ஒருங்கிணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் நலன்களை உறுதி செய்யும் நோக்கில் இந்த நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இந்த நலன்புரி நிலையம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 புலிகளின் முன்னாள் போராளிகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு இந்த நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment