Saturday, December 15, 2012
திருவள்ளூர்::திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அரசு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மணவாளன் நகரில் நடந்தது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ரமணா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுதாகர், ஒன்றியக்குழு தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் பாசுரான், இன்பநாதன் வரவேற்றனர். லோகநாதன், பூபாலன், பட்டாபி, வலசை சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசியதாவது, காவிரி நீர் பிரச்னைக்காக உச்சநீதிமன்றம் வரை சென்று சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரிக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். முல்லை பெரியாறு பிரச்னை குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது எதிர்கட்சி தலைவர் தான் வழிமொழிந்து பேசவேண்டும். அதுதான் சபை மரபு. அன்று அவர் சட்டசபைக்கு வரவில்லை. முல்லை பெரியாறு என்றால் என்ன என்று கேட்பவர்தான் எதிர்கட்சி தலைவர். சட்டசபைக்கு ஒழுங்காக வராத விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் பதவிக்கு தகுதியில்லாதவர். இவ்வாறு அவர் பேசினார். டெல்லி சிறப்பு பிரதிநிதி நரசிம்மன், மாநில இளைஞரணி இணை செயலாளர் செவ்வை சம்பத்குமார், ராம்குமார், வேல்முருகன், பெருவை சேகர், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment