Thursday, December 13, 2012
இலங்கை::புலிகளால் இரணைமடுவில் அமைக்கப்பட்ட விமான ஓடுபாதை புனரமைக்கப்பட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் விரைவில் அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
புலிகளினால் இரணைமடு விமான ஓடுபாதையை இலங்கை விமானப்படை தற்போது புனரமைத்து வருகிறது.
இதுவரை 1100 மீற்றர் நீளமான ஓடுபாதை புனரமைப்பு வேலைகள் முடிவடைந்துள்ளன.
இந்த ஓடுபாதையை 1500 மீற்றர் வரை விரிவாக்குவதற்கான பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சி-130 போன்ற கனரக போக்குவரத்து விமானங்களும் தரையிறங்கும் வகையில் இந்த ஓடுபாதை விரிவாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஓடுபாதை புனரமைப்பு பணிகள் முடிவடைந்ததும், இலங்கை ஜனாதிபதி மகிந்த அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
இதற்கு முன்னோடியாக, இலங்கை விமானப்படைத் தளபதி எயர் மார்சல் ஹர்ச அபேவர்த்தன கடந்த 9ம் நாள் வை-12 விமானம் ஒன்றை இந்த ஓடுபாதையில் தரையிறக்கி, சோதனை நடத்தியுள்ளார்.
No comments:
Post a Comment