Tuesday, November 27, 2012
இலங்கை::இலங்கை அரசானது யுத்தத்தின் பின்னரான இக் குறுகிய காலகட்டத்துக்குள் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் புனர்நிர்மானம், மீள்குடியேற்றம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான பாதைகளை வகுத்தல் என பலதரப்பட்ட வழிகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபி புலோச் வடக்கு கிழக்குக்கான தனது முதல் விஜயத்தின் பின்னர் தெரிவித்தார்.
அவரது இவ் விஜயம் தொடர்பாக தொடர்ந்து குறிப்பிடுகையில், தாம் புலிகளின் கொடூரம் பற்றியும் அவர்களது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பயங்கர படுகொலைகள் பற்றியும் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டார். இலங்கை அரசானது பல சவால்களுக்கு மத்தியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை புனர்வாழ்வளித்து யுத்தத்தின் பாதிப்புக்களில் இருந்நது அவர்களை உளவியல் ரீதியாக மீட்க எடுக்கப்பட்ட முயற்சியையும் பாராட்டினார்.
அத்துடன் இலங்கையில் நிலையான சமாதானத்தை நிலைநாட்டும் முகமாக பிர்த்தானியா பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment