Thursday, November 1, 2012

தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக்காமல் ஓயமாட்டேன் ஜெயலலிதா!

Thursday, November 01, 2012
சென்னை::சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட முந்தைய தி.மு.க அரசும், மத்திய அரசும்தான் காரணம். மத்தியில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் தேவையான மின்சாரத்தை தமிழகத்திற்கு வாங்கித் தராமல் வஞ்சிக்கிறார்கள். மத்திய அரசும் வேண்டும் என்றே தமிழகத்தை வஞ்சிக்கிறது. ஆனாலும் நான் சோர்வடையாமல் மத்திய அரசு வஞ்சித்தாலும் வெற்றி பெற்றே தீருவேன். தோல்வி அடைய மாட்டேன். தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றாமல் நான் ஓய மாட்டேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment