Monday, November 26, 2012
இலங்கை::பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச் சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன் வாழ்கிறார் என்ற இந்த நூற்றாண்டின் கேலிக்கூத்தான பொய்யை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்தும் சிலர் பிரபாகரன் வந்ததாலே பணத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள். இதற்காகவே இறந்துபோன பிரபாகரனை இன்னும் உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.
சரி தவறு என்பதற்கு அப்பால் தனது வாழ் நாள் முழுவதையும் போராட்டத்திற்கே அர்பணித்த பிரபாகரனை அனாதைப் பிணமாய் அஞ்சலி கூட இல்லாமல் அழித்துவிட்டார்கள். நான்கு வருடங்களை தொலைத்த பின்னரும் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தாத மாவீரர் தினம் எவ்வளவு நயவஞ்சகத் தனமானது! மாவீரர் தினத்திம் உச்சபட்ச அருவருப்பு இதில் தான் தங்கியுள்ளது!!
தமது குடும்பத்தின் இளம் சந்ததியைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள் மாவீரர் தின ஏற்பாட்டாளர்களின் திருட்டுத்தனத்தைப் புரிந்துகொள்வார்கள்.
No comments:
Post a Comment