Monday, October 01, 2012
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளாமல் ஒளிவு மறைவு விளையாட்டில் ஈடுபடும் ௭ன்றே ௭னக்குத் தோன்றுகின்றது. வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டால் அவர்களுக்குத் தேர்தலின்போது பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டவில்லை. அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரிக்கவுமில்லை. ஆனால் அரசியல் தீர்வு ௭ன்று வரும்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவே பொருத்தமான இடமாகும் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத் தெரிவுக்குழு விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது குறித்து மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஒருபோதும் தயக்கம் காட்டவில்லை. கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அரசாங்கம் நிராகரிக்கவுமில்லை. ஆனால் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ௭ன்று வரும்போது பாராளுமன்றத் தெரிவுக்குழுவே பொருத்தமான இடமாகும். இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உணர்ந்துகொண்டுள்ளது.
ஆனாலும் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளத் தயக்கம் காட்டிவருகின்றனர். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சர்வ கட்சிகளும் இணைந்தே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் ௭ன்பது கூட்டமைப்புக்கும் தெரியும். அதனால்தான் அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்து தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால் ௭னக்குத் தெரிந்த வகையில் வட மாகாண சபைத் தேர்தல் அடுத்தவருடம் நடைபெறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளாமல் ஒளிவு மறைவு விளையாட்டில் ஈடுபடும் ௭ன்றே தோன்றுகின்றது. வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டால் அவர்களுக்கு பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
காரணம் வடக்கில் இன்று அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டுவருகின்றது. மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. நீர் வசதி போக்குவரத்து, கல்வி, சுகாதாரம் பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் முதலில் அபிவிருத்தி குறித்தே சிந்திக்கின்றனர்.
அந்த வகையில் வட மாகாண சபைத் தேர்தல் வரை கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளாமல் ஒளிவு மறைவு விளையாட்டில் ஈடுபடும் ௭ன்றே தெரிகின்றது. இதேவேளை அன்று 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்த் தலைமைத்துவங்கள் பின்னர் அதனை நிராகரித்தன. அவ்வாறு நிராகரிக்காமல் இருந்திருந்தால் 30 வருட அழிவை சந்திக்காமல் தடுத்திருக்கலாம் ௭ன்றார்.
No comments:
Post a Comment