Monday, October 01, 2012
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு தெரிவாகிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) வீட்டில் பாரிய வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவின் செட்டிபாளையம் கிராமத்திலுள்ள கிழக்கு மாகாணசபை உறுப்பினரான கோவிந்தன் கருணாகரனுக்கு சொந்தமான வீட்டிலிருந்தே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
குண்டுகளை இனங்கண்ட பொலிஸார் - குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் அக்குண்டுகளை மீட்டுள்ளனர். மாகாணசபை உறுப்பினர் இன்று திருகோணமலையில் ஆரம்பிக்கவுள்ள கூட்டத்தொடரில் பங்குபற்றச் சென்றுள்ளதால் அவரை விசாரணைக்குட்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பொலிஸார் மேலும் தொரிவித்தனர்.
No comments:
Post a Comment