Friday, September 28, 2012
இலங்கை::ஹம்பாந்தோட்டை பொலிஸ் அதிகாரிகளால் தான் அவமானப்படுத்தப்பட்டு, சங்கடமான நிலைக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்து, பெண் சட்டத்தரணியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்கத்தக்கதென உயர்நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
நயோமி நிரோசிக்கா அபேவிக்கிரம என்பவரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஹம்பாந்தோட்டை பொலிஸ் தலைமையக இன்ஸ்பெக்டர் ரட்னவீர, குற்றவியல் பொறுப்பதிகாரி நலிந்த, கான்ஸ்டபிள் அஜந்த, தங்காலை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பலகல்ல, பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன விஜேரட்ன, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 55 ஆம் பிரிவானது, பொலிஸ் நிலையங்களுக்கு தமது வாடிக்கையாளர் சார்பில் பேசவரும் சட்டத்தரணிகள் பொலிஸ் அதிகாரிகள் நடத்த வேண்டிய முறைபற்றி கூறியுள்ளது என மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி பொலிஸ் அதிகாரிகள் நடத்தையானது சட்டங்களை ஒட்டுமொத்தமாக மீறியது எனவும் அவர்களின் நடத்தை துர்நோக்கம் கொண்டது எனவும் தனக்கு சட்டத்தரணிகளின் பாதுகாப்பு மறுக்கப்பட்டது எனவும் மனுதாரர் முறையிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவமானது சட்டபூர்வமற்ற கைது மற்றும் தடுப்புக்கு சமமானது எனவும் தனக்கு 6 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் மேற்படி சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment