Thursday, August 23, 2012

அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இமெயிலில் மிரட்டல் விடுத்தவர் ஆயுதங்களுடன் கைது!

Thursday, August 23, 2012
லாஸ் ஏஞ்சல்ஸ்::அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு இமெயிலில் மிரட்டல் விடுத்த நபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் உள்ள சியாட்டிலில் வசிக்கும் நபர் ஒருவர் அதிபர் ஒபாமாவுக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ரகசிய போலீஸ் மற்றும் உள்ளூர் போலீசார் சேர்ந்து சியாட்டிலில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றனர். அங்கு அந்த நபர் ஆயுதங்கள் வைத்திருந்ததைப் பார்த்த போலீசார் அவர் எந்தவித அசம்பாவிதத்திலும் ஈடுபடும் முன்பு அவரை கைது செய்தனர்.

இது குறித்து வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அட்டர்னி அலுவலக செய்தித் தொடர்பாளர் எமிலி லாங்கலீ கூறுகையில்,

அதிபருக்கு இமெயில் மூலம் அந்த நபர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து தான் அவர் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் உள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வெண்டு குண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment