Tuesday, August 21, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தை கிளிநொச்சி வளாகத்தில் உடனடியாக ஆரம்பிக்கும் பொருட்டு, முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்களை துரிதப்படுத்துமாறு துறைசார்ந்தோரிடம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாயபீடம் அமையப் பெற்றுள்ள பகுதிக்கு இன்றையதினம் (21) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது விவசாயபீடத்தை உடனடியாக ஆரம்பிப்பதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் பல்கலைக்கழகத்தின் துறைசார்ந்தோரால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்றிட்டங்கள் போதுமானதாக இல்லையென்றும், உடனடியாக கற்றல் செயற்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கு துறைசார்ந்தோர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், விவசாயபீடம் மட்டுமல்லாது பொறியியல் பீடத்தையும் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்;டார்.
அத்துடன் அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்கும் நோக்கில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறும், கிளிநொச்சியில் தங்கி நிற்கும் விரிவுரையாளர்களுக்கு தற்காலிக இருப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் மாவட்ட அரச அதிபரை பணித்த அமைச்சர் அவர்கள், வளாகத்தின் சுத்தத்தைக் கருத்தில் கொண்டு, பாடசாலை மாணவர்களை ஒன்றிணைத்து பாரிய சிரமதானப் பணியினை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்காலிக பணியாளர்களை இணைத்து செயற்திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார்ந்தோரிடம் கேட்டுக் கொண்டதுடன், இதனிடையே மின்விநியோகம், வளாகத்தைச் சூழ சுற்றுமதில் அமைத்தல், ஏ9 வீதியிலிருந்து வளாகத்தைச் வரையிலான வீதிக்கு தார் இட்டு செப்பனிடுவது, மலசல கூடங்களின் புனரமைப்பு உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள், விவசாய பீடத்திலிருந்து விரிவுரைகளை ஆரம்பிக்கும் பொருட்டு குடிதண்ணீரை பெற்றுக் கொள்ளும் முகமாகவும் ஏனைய வேலைத் திட்டங்களுக்காகவும் அரச அதிபர் ஊடாக இரண்டு உழவு இயந்திரங்களையும் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன் தண்ணீர் பவுசர், நீர் தாங்கி நீரிறைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 4 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையும் இதன்போது வழங்கி வைத்தார்.
இதன்போது குறிப்பாக கிளிநொச்சி மத்தியக் கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் உறுதிபடத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், யாழ் பல்கலைக்கழக விவசாயபீடாதிபதி கலாநிதி மிகுந்தன், விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் கந்தசாமி, வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை, பதிவாளர் காண்டீபன், ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் உள்ளிட்டோருடன் பேரவை உறுப்பினர்களும் உடனிருந்தனர்...
யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் சுகாதாரப்பணி உதவியாளர்களாக (உளநலம்) தெரிவுசெய்யப்பட்டோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்!
யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் சுகாதாரப்பணி உதவியாளர்களாக (உளநலம்) தெரிவுசெய்யப்பட்டோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நியமனக்கடிதங்களை வழங்கிவைத்தார்.
இன்றுமாலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் பணிமனையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் யாழ். மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு மேல் தொண்டர்களாக பணிபுரிந்தோருக்கே இந்நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அமைச்சரவர்களைச் சந்தித்து தமக்கு நிரந்தர நியமனத்தினைப் பெற்றுத்தருமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நியமனம் பெற்றுக்கொண்டோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை மற்றும் வேலணை பிரதேச வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் கடமையாற்ற உள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்தார்.
இன்றைய நியமனம் வழங்கும் நிகழ்வில் மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ். உள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சா.சிவயோகன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைப்பாளர் கோ.கிருஷ்ணகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment