Tuesday, August 28, 2012

இலங்கை ராணுவ அதிகாரிகளை திருப்பி அனுப்ப வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

Tuesday, August 28, 2012
சென்னை::தமிழகத்தில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் பயிற்சியை நிறுத்திவிட்டு, அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்காத மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுக்கு பயிற்சி தொடரும் என்று அறிவித்தது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், ‘எங்கள் கோரிக்கையை ஏற்காமல் பயிற்சி தொடரும் என மதிய அரசு கூறியிருப்பது வியப்பளிக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கண்டிக்கத்தக்க செயலை மத்திய அரசு கைவிடவேண்டும். மத்திய அரசின் இந்த செயல் தமிழ் மக்களிள் உணர்வுக்கு இழைக்கப்படும் துரோகம். எனவே பயிற்சி பெற்று வரும் இலங்கை அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment