Wednesday, August 29, 2012

குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பபடுவர் - மத்திய இணையமைச்சர் நாராயணசாமி!

Wednesday, August 29, 2012
டெல்லி::குன்னூரில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவ அதிகாரிகள் திருப்பி அனுப்பபடுவார்கள், என்று மத்திய இணையமைச்சர் நாராயணசாமி உறுதி கூறியுள்ளார். தமிழக மக்களின் எதிர்ப்பு பற்றி ஏற்கனவே, அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர் காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஈரான் சென்றுள்ள பிரதமர் இந்தியா திரும்பியதும், இலங்கை அதிகாரிகளை திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment