Wednesday, August 22, 2012
திருப்பூர்::இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்று திருப்பூரில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று இரவு நடந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: தமிழக கடலோர மீனவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இதனை கண்டுகொள்ளவில்லை. மாறி மாறி கடிதம் எழுதினார்களே தவிர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 20 ஆண்டுகளாக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். வட மாநிலத்தினர் விரட்டப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து குரல் கொடுத்த மத்திய அரசு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.
தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக நலனில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம். தேமுதிக தயாராக உள்ளது. நாங்கள் தலைமையேற்கவில்லை. மீனவர் பிரச்னைக்காக யார் தலைமையேற்றாலும் டெல்லி வந்து முறையிட நாங்கள் தயாராக உள்ளோம். ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் வரிப்பணத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். நாங்கள் தொண்டர்களின் சொந்த பணத்தில் உதவிகள் செய்கிறோம். தமிழகத்தில் தண்ணீர் கொள்ளை, கனிம வளம் கொள்ளை, எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம். விலைவாசி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 75 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டில் ஐந்து லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்துள்ளனர். இதில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார்கள்? இவ்வாறு விஜயகாந்த் பேசினார். கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment