Thursday, August 2, 2012

பிரிட்டன் பாராளுமன்றக் குழுவினர் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு!

Thursday, August 02, 2012
இலங்கை::பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜேம்ஸ் வர்ட்டன் தலைமையில் இலங்கைக்கு விஜயம் செய்த, 9 பேரைக் கொண்ட பிரிட்டன் பாராளுமன்றக் குழுவினர், கடந்து ஜூலை 31ஆம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் திரு. கோடாபய ராஜபக்‌ஷ அவர்களை அமைச்சில் வைத்து சந்தித்தனர்.

இச் சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் முகமாக பாதுகாப்புச் செயலாளர் மற்றும் குழுவின் தலைவருகளுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பறிமாற்றப்பட்டன.

1 comment: