Friday, June, ,08, 2012இலங்கை::நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுவதை உறுதி செய்யக்கூடிய ஆலோசனைகள் அடங்கிய ஒரு பொதியை அரசாங்கத்திடம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை கூறியது.
பந்து இப்போது அரசாங்கத்தின் பக்கம் உள்ளது' என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இந்தப் பொதியில் ஏற்கனவே பல்வேறு அரசாங்கங்களினாலும் முன்வைக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் அடங்கியுள்ளன என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறினார்.
மங்கள முனசிங்க குழு அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா முன்வைத்த பொதி, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி தேர்தலின்பொது வெளியிடப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்பவை நாடாளுமன்ற தெரிவக்குழுவில் ஆராயப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரும்புகின்றது.
'இந்த விடயங்களை அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் நாம் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்' என கிரியெல்ல எம்.பி. கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஷ் பிரேமசந்திரன், நாடாளுமன்ற தெரிவுக்குழு பற்றி கருத்துரைக்கும் போது இணக்கப்போக்கை வெளிப்படுத்தினார். இது வழமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடைப்பிடித்த கடும் போக்கிலிருந்து மாறுபட்டிருந்தது.
நாம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதைப்பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு மீண்டும் தொடங்குமாயின் த.தே.கூ. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்கும் என அரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார் என கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பது தொடர்பில் நிபந்தனைகளின் பட்டியலை ஐ.தே.க. சமர்ப்பித்துள்ளது. அரசாங்கம், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துரையாடவும், 13ஆம் திருத்தத்தின் அடிப்படையில் ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ளவும் அரசாங்கம் தயாராயின் நாமும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்போம்' என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் கூறினார்.
No comments:
Post a Comment