Friday, June, 01, 2012
இலங்கை::வடமாகாணத்தில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் மீள்குடியேற்றப்படும் கால எல்லையை உறுதியாக கூறமுடியாது என மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை மக்கள் மீள்குடியேற்றப்படாத பகுதிகளில் மேற்கொள்ளப்படும் நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவு பெற்றதன் பின்னரே, அந்தப் பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தெரிவித்தார்.
மீள்குடியேற்றப் பணிகள் நிறைவுபெறும் திகதி தொடர்பாக பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் அது குறித்து அமைச்சரிடம் வினவியபோதே, இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார்.
நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவுபெற்று மக்களை மீள்குடியேற்றுவதற்கான அனுமதி கிடைத்தவுடன் வவுனியா நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களை அங்கு மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
நலன்புரி நிலையங்களில் மக்கள் மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருவதை தாமும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த அமைச்சர், அவர்களை இயன்றளவு விரைவில் மீள்குடியேற்றுவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் நிலையே அவற்றை அகற்றுவதில் தமதம் ஏற்படுவதற்கான காரணம் என மீள்குடியேற்ற அமைச்சர் தெரிவித்தார்.
நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கால அட்டவணை ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த போதிலும் அதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் 1,900 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5000 பேர் தங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களை தம்மால் உறுதியாக கூற முடியாது எனக் குறிப்பிட்டார்.
நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவுபெற்றவுடன் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு செயலாளர் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோண் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment