Friday, June, 01, 2012
இலங்கை::முகாம்கள் தொடர்பாக பேசுவதற்கு எந்தவொரு நாட்டின் பிரதிநிதியும் இலங்கைக்குள் நுழையக் கூடாது என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக தெரிவித்தார்.
வெள்ளமுள்ளி வாய்க்கால் தொடர்பாக போலியான பிரசாரங்களை பிரித்தானியாவே முன்னின்று முன்னெடுத்தது. எனவே பிரித்தானியாவின் நோக்கங்களை உள்நாட்டில் ஈடு செய்து கொள்ள இடமளிக்கப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தான் ஒரு அதிகாரி என்பதனையும் தனக்குள்ள பொறுப்பையும் மறந்து செயற்படக்கூடாது. இலங்கையில் வீர தீர செயல்களை அரங்கேற்றுவதால் எவ்விதமான பயனும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக தொடர்ந்தும் கூறுகையில் :
பிரித்தானியாவால் இலங்கை உட்பட ஆசிய நாடுகள் 1948ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் அடிமைப்படுத்தப்பட்டே வைக்கப்பட்டிருந்தன. இதன் பின்னரும் தமிழின பிரிவினை வாதத்தை ஊக்குவித்து நாட்டில் மோதல்கள் ஏற்பட பிரதான காரணகர்த்தாவாக பிரித்தானியாவே விளங்கியது. தற்போது மேற்குலக நாடுகள் ஐ.நா.வுடன் இணைந்து இலங்கையை அடிமைப்படுத்தும் நோக்கில் தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றன.
வடக்கின் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட எந்தவொரு நாட்டிற்கும் உரிமை கிடையாது. பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரன்கின் நாட்டின் சுயாதீன தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்நாட்டு விடயம் ஒன்றை மையப்படுத்தி கருத்தை வெளியிட்டார். இதனை வன்மையாக ஜாதிக ஹெல உறுமய கண்டிக்கின்றது. அத்துடன் லியாம் பொக்ஸ் தலைமையிலான பிரித்தானிய பாராளுமன்றக் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இவர்கள் வடக்கின் இராணுவ முகாம்கள் தொடர்பில் ஆராய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு வரும் நோக்கத்தை லியாம் பொக்ஸ் குழுவினர் மாற்றிக் கொள்ள வேண்டும். வடக்கு இராணுவ முகாம்கள் தொடர்பாகவோ ஏனைய உள்நாட்டு விடயங்கள் தொடர்பாக ஆராய எந்தவொரு அந்நிய நாட்டின் பிரதிநிதிகளும் நாட்டுக்குள் நுழையக் கூடாது. இவ்வாறான விடயம் தொடர்பில் அரசு விழிப்புடன் செயற்பட வேண்டும். அதே போன்று நவநீதம்பிள்ளை தனக்குள்ள பொறுப்பையும் வரையறையையும் கணித்துச் செயற்பட வேண்டும்.
அமெரிக்காவினால் முன்னெடுக்கப்படுகின்ற எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை செய்யாது சிறிய நாடு என்பதால் இலங்கைக்கு வீண் அழுத்தங்களை கொடுக்க முற்பட்டால் அதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றார்.

No comments:
Post a Comment