Friday, June, 01, 2012
மீனம்பாக்கம்::சென்னையில் உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் கால் சென்டருக்கு நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தையின் குரல், இந்தியில் ஏதோ பேசியது. ஊழியருக்கு புரியவில்லை. ஆனால் ‘பாம்’ என மட்டும் புரிந்தது. உடனே இந்தி தெரிந்த ஊழியருக்கு லைனை கொடுப்பதற்குள் தொடர்பு துண்டானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே இண்டிகோ ஏர்லைன்ஸ் தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு அவசரமாக தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் அலுவலகம், இண்டிகோ விமானம் மற்றும் விமான நிலையத்தின் மற்ற பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து கால்சென்டருக்கு வந்த தொலைபேசி நம்பரை வாங்கி போலீசார் விசாரித்தனர். பீகாரில் இருந்து லேண்ட் லைன் போனில் எஸ்டிடி வந்தது தெரிந்தது. அதே எண்ணை தொடர்பு கொண்டபோது, எதிர்முனையில் ஆண் குரல்... ‘குழந்தை தெரியாமல் போன் செய்து விட்டது, மன்னித்து கொள்ளுங்கள்’ என்று இந்தியில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.
இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஏனென்றால் நள்ளிரவில் குழந்தை போனை எடுத்து இண்டிகோ கால் சென்டருக்கு பாம் இருப்பதாக போன் செய்து பேச வேண்டிய அவசியம் என்ன என்ற குழப்பம் ஏற்பட்டது. மேலும், போலீசார் இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தவிர, பீகாரில் அந்த குடும்பத்தில் யாரெல்லாம் வசிக்கின்றனர், அவர்களது குடும்பம் எப்படிப்பட்டது என்பது பற்றி விசாரிக்க உள்ளனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்துக்கு பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment