Thursday, June 7, 2012

தெரிவுக்குழுவில் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தயக்கம் காட்டிவருகின்றது என புரியவில்லை-ராஜித சேனாரத்ன!

Thursday, June 07, 2012
இலங்கை::இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் தயக்கம் காட்டிவருகின்றது என தங்களுக்கு புரியவில்லை என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 60 வருடகாலம் பொறுத்திருந்த இவர்களால் 6 மாதங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து செயற்பட முடியாதா? எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ௭திர்கால நிலைமைகள் குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் சேனாரட்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அரசாங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் இன்னும் அதில் இணைந்துகொள்ளாமல் உள்ளன.

இதனால் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியாத நிலைமைகளே உள்ளன. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் இன்னும் தயக்கம் காட்டிவருகின்றது என ௭மக்குப் புரியவில்லை.

அதாவது நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆறு மாதங்களில் தீர்வு தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படல் வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு ஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ௭வ்விதமான தயக்கமும் இன்றி தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ள முடியும்.

ஒருவேளை ஆறு மாத காலத்தில் தீர்வு வராவிடின் அரசாங்கத்துக்கே சாதகமற்ற நிலைமை ஏற்படும். அத்துடன் அந்த நேரத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தனது நியாயத்தை விளக்கலாம். இதனை புரிந்துகொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ள முன்வரவேண்டும்.

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 60 வருடகாலம் பொறுத்திருந்த இவர்களால் 6 மாதங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணை ந்து செயற்பட முடியாதா? என்பதே எமது முன்னுள்ள கேள்வியாகும் எனவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment