Wednesday, June 6, 2012

லண்டன் நகரில் அமைந்துள்ள சென் போல் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்பு!

Wednesday, June, 06, 2012
ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எலிசபெத் மகாராணியார் முடிசூடி 60 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் நேற்று (05) காலை இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டனர்.

லண்டன் நகரில் அமைந்துள்ள சென். போல் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆராதனையில் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இரண்டாவது எலிசபெத் மகாராணியார் முடிசூடி 60 ஆண்டு பூர்த்தி விழாவில் மூன்று நாட்களுக்கு லண்டன் முழுவதிலும் பல்வேறு அலங்கார நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் பங்கேற்பதற்காக பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் 51 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் தற்போது லண்டன் நகரை சென்றடைந்துள்ளனர். அதில் ஒரு அங்கமாகவே மேற் படி ஆராதனை நிகழ்வு இடம் பெற்றது.

இவ்விழாவில் கலந்துகொள்ள சென்றுள்ள அரச தலைவர்களை வர வேற்கும் நிகழ்வொன்று பக்கிங் ஹாம் மாளிகையில் நேற்று முன் தினம் (04) நடைபெற்றதுடன் அதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார்.

நேற்று காலை லண்டன் நகரிலே பொதுநலவாய அமைப்பின் செய லாளர் கமலேஷ் ஷர்மா மற்றும் ஜனரல் எலன் கொலின் ஆகி யோரை சந்தித்து உரையாற்றுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment