Friday, June, 08, 2012ஜெனீவா::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு நவனீதம்பிள்ளை முக்கிய பங்காற்றியுள்ளதாக தமரா சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள நவனீதம்பிள்ளை ஒத்துழைப்ப வழங்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் நவனீதம்பிள்ளைக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் தமரா குணநாயகம் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆசிய பசுபிக் பிரிவின் பொறுப்பாளர் ரொரி முன்குவான் அனுப்பி வைத்த சில மின்னஞ்சல்களின் மூலம், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பங்களிப்ப தெளிவாக வெளிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிரந்தரப் பிரதிநிதி பதவி தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கும் தமரா குணநாயகத்திற்கும் கருத்து முரண்பாடு நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிவிவகார அமைச்சுடன் ஏற்படுத்திக் கொண்ட முரண்பாட்டைத் தொடர்ந்து இராஜதந்திர சேவையிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக தமரா குணநாயகம் அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment