Saturday, June, 02, 2012
இலங்கை::இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஒருதொகை கேரளா கஞ்சாவை கடத்திய மூன்று சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கோடி ரூபா பெறுமதியான இந்த கஞ்சா சுமார் நூறு கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் படகொன்றையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர், கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.
கற்பிட்டி உச்சிமுனை கடலில் வைத்தே இந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து முன்னெடுக்கப்படுகின்ற இந்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் பொருட்டு கரையோர பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்...
கற்பிட்டி, உச்சிமுனை கடற்பரப்பில் வைத்து மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த கடற்படையினர், இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை கற்பிட்டி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைத்துள்ளனர்

No comments:
Post a Comment